close
Choose your channels

'விஸ்வாசம்' படம் குறித்த புதிய அப்டேட்

Wednesday, October 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளிவந்துள்ளது.

'விஸ்வாசம்' படத்தின் அஜித் பகுதிக்குண்டான டப்பிங் பணி இன்று தொடங்கிவிட்டதாகவும், இன்று காலை 5 மணி முதல் அஜித் டப்பிங் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் டப்பிங் தியேட்டரின் வெளியே காத்திருந்த ரசிகர்கள் அஜித்துடன் இணைந்து எடுத்த புகைப்படமும் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

வரும் பொங்கல் தினத்தில் வெளிவரவுள்ள இந்த படத்தில் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.