close
Choose your channels

விஜய் இந்த கேரக்டரில் ரொம்ப வருஷமா நடிக்கவில்லை: மாளவிகா மோகனன்

Tuesday, February 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் ரொம்ப வருடமாக ரொமான்டிக் கேரக்டரில் நடிக்கவில்லை என்றும் அப்படி ஒரு கேரக்டரில் நடித்தால் மீண்டும் அவருடன் ஜோடி சேர ஆசை என்றும் மாளவிகா மேனன் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் அதன்பின்னர் தனுஷ் நடித்த ’மாறன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ரசிகர்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் உரையாடிய மாளவிகா மோகனன் ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார். அவற்றில் ஒன்று மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து நடிப்பீர்களா? அவ்வாறு நடிப்பதாக இருந்தால் எந்த மாதிரியான கேரக்டரில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்ட கேள்விக்கு ’தளபதி விஜய் ஒரு முழுநீள ரொமான்ஸ் படத்தில் நடித்து நீண்ட வருடங்கள் ஆகிறது என்றும் அப்படி ஒரு படத்தில் அவர் திரும்ப நடித்தால் அவருடன் இணைந்து நடிக்க ஆசை என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் தனுஷுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது? என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த மாளவிகா மோகனன் ’அவருடன் நடித்தது மிகப்பெரிய மகிழ்ச்சியான அனுபவம் என்றும் மாஸ்டர் கிளாஸ் நடிப்பு திறமை உள்ளவர் என்றும் கூறினார்

மேலும் அல்லு அர்ஜுன் குறித்து ஒரே ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்று கேட்ட கேள்விக்கு ’மாஸ்’ என்று பதிலளித்த மாளவிகா, ‘எனக்கு மிகவும் பிடித்த பாடல் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.