தினமும் 5 மணி நேரம் மேக்கப் போடும் மாளவிகா மோகனன்.. எந்த படத்திற்கு தெரியுமா? வைரல் புகைப்படங்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை மாளவிகா மோகனன் தான் நடித்து வரும் திரைப்படத்திற்காக தினமும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் மேக்கப் போடுவதற்கு மட்டும் செலவு செய்வதாக கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதன் பின்னர் விஜய் நடித்த ’மாஸ்டர்’ தனுஷ் நடித்த ’மாறன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த மாளவிகா, தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ’தங்கலான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் கடந்த சில மாதங்களாக கலந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் தனக்கு மேக்கப் போடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களின் கேப்ஷனாக அவர் பதிவு செய்த போது ’நான் தினமும் நான்கு முதல் ஐந்து மணி நேரங்கள் மேக்கப் மற்றும் காஸ்டியூம் ஆகியவற்றிற்காக செலவு செய்கிறேன். அந்த நேரங்களில் நான் அமைதியாக உட்கார்ந்து இருப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது’ என்று கூறியுள்ளார்.
மாளவிகா மோகனுக்கு மேக்கப் போடும் புகைப்படங்கள் மற்றும் காஸ்டியூம் அணியும் புகைப்படங்கள் அவர்களின் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments