close
Choose your channels

புதிய படப்பிடிப்பில் மணிமேகலை.. இதற்குதான் 'குக் வித் கோமாளி'யில் இருந்து விலகினாரா?

Wednesday, March 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்த நிலையில் தற்போது அவர் புதிய படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இதற்காகத்தான் அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் முக்கிய கோமாளியாக இருந்து வந்தவர் மணிமேகலை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று சீசன்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தி எந்த கெட்டப் போட்டாலும் அந்த கெட்டப்பாகவே மாறிய மணிமேகலை நிகழ்ச்சியின் இயக்குனர் மட்டுமின்றி நடுவர்கள் உள்பட அனைவரையும் கலாய்த்து தள்ளியது பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் திடீரென பிப்ரவரி 26 ஆம் தேதியுடன் தான் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தது பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் குக் வித் கோமாளி நிர்வாகிகளுக்கும் மணிமேகலைக்கும் பிரச்சனை என்றும் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதாகவும் அதனால்தான் அவர் விலகியதாகவும் பல்வேறு வதந்திகள் கிளம்பின.

இந்த நிலையில் தற்போது மணிமேகலை புதிய படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து புதிய வாய்ப்பை பெற்றதால் தான் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் இருந்து விலகி இருப்பதாக தெரிய வருகிறது. இந்த புதிய படப்பிடிப்பு என்ன என்பதை மணிமேகலை விரைவில் தனது ரசிகர்களுக்கு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment