மாளவிகா மோகனனை அடுத்து 'தனுஷ் 43' படத்தில் இணைந்த 'மாஸ்டர்' நடிகர்!

  • IndiaGlitz, [Wednesday,February 17 2021]

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’ஜகமே தந்திரம்’ மற்றும் ’கர்ணன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ஹாலிவுட் படமான ’தி க்ரே மேன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இது தனுஷின் 43 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ’மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாகவும் சமுத்திரகனி உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தில் நடிகர் மகேந்திரன் இணைந்து உள்ளதாக அறிவித்துள்ளது. நடிகர் மகேந்திரன் ஏற்கனவே தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதி கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த மாளவிகா மோகனன், மகேந்திரன் ஆகிய இருவரும் தனுஷின் அடுத்த படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'இது புன்னகை அரசி ரம்யா பாண்டியனின் வேலை தான்': ஷிவானியின் இன்ஸ்டா போஸ்ட் வைரல்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது சர்ச்சைக்குரிய வகையில் பாலாஜியுடன் மட்டுமே நெருக்கமாக இருந்தாலும் கடைசி நேரத்தில் சிங்கப்பெண்ணாக வெளியேறினார்

விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் அவரது ரசிகர்களை மகிழ்ச்சி உள்ளாக்கியுள்ளது.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர் மாலை அணிவித்து மரியாதை!

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கூழாங்கல் விருதுக்குப் பிறகு ரவுடி பிக்சர்ஸின் அடுத்த பட அறிவிப்பு…

“நானும் ரௌடிதான்“ படத்தில் நடித்ததன் மூலம் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இருவரும் காதல் ஜோடிகளாக மாறினர்.

புகார் பெட்டி பிரச்சாரம் எல்லாம் மலையேறி விட்டது… எதிர்க்கட்சிக்கு பதிலடி கொடுத்த தமிழக முதல்வர்!

50 ஆண்டுகளுக்கு முன்பு வரை புகார் பெட்டி வைத்து அதன்மூலம் குறைகள் கேட்கப் பட்டது. அதுபோன்ற பிரச்சாரத்தை தற்போது தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.