close
Choose your channels

விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

Wednesday, February 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ’துருவ நட்சத்திரம்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் அவரது ரசிகர்களை மகிழ்ச்சி உள்ளாக்கியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தாமதமாகி ஒருவழியாக சமீபத்தில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தேக்கம் இருந்தது. குறிப்பாக இந்த படத்தின் டப்பிங் பணியில் விக்ரம் கலந்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது விக்ரம் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதை அடுத்து அந்த படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்பிய உடன் ’துருவ நட்சத்திரம்’ படத்தின் டப்பிங் பணியில் கலந்து கொள்வார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன

இதனை அடுத்து ’துருவ நட்சத்திரம்’ படத்தின் எடிட்டிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடிக்கும் பணியில் கவுதம் மேனன் உள்பட படக்குழுவினர் தீவிரமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரமின் டப்பிங் பணிகள் முடிந்ததும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விக்ரம் நடித்த ’கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதை அடுத்து இந்த ஆண்டு விக்ரமின் ’கோப்ரா’ மற்றும் ’துருவ நட்சத்திரம்’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.