close
Choose your channels

'கோட்' படத்தில் இணைந்த 'மாஸ்டர்' பட பிரபலம்.. அப்ப நிச்சயம் ஒரு ஹிட் இருக்குது..!

Tuesday, March 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் பணிபுரிந்த பிரபலம் ஒருவர் இணைந்திருப்பதாக கூறப்படுவதை அடுத்து இந்த படத்தில் ஒரு ஹீட் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதுவரை ’கோட்’ படத்திற்காக நான்கு பாடல்களை கம்போஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் மூன்று பாடல்களை கங்கை அமரன், மதன் கார்க்கி மற்றும் கபிலன் வைரமுத்து எழுதியதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பாடலாசிரியர் மற்றும் பாடகர் தெருக்குரல் அறிவு ஒரு ராப் சாங் எழுதி பாடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’வாத்தி ரெய்டு’ என்ற சூப்பர் ஹிட் பாடலை எழுதி பாடிய அறிவு தற்போது ’கோட்’ படத்திலும் இணைந்து உள்ளதை அடுத்து அதே போல் இந்த படத்திலும் ஒரு ஹிட் பாடல் உறுதி என்பது தெரிய வந்துள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் ரெக்கார்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விஜய் இந்த படத்தில் ஒரு பாடல் பாடியுள்ள நிலையில் அந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்த இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

 
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.