close
Choose your channels

'தளபதி 67' படத்தின் இயக்குனர் இந்த சூப்பர்ஹிட் இயக்குனர?

Monday, October 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 67வது படத்தின் இயக்குனர் சூப்பர் ஹிட் பட இயக்குனர் என்று தகவல்கள் கசிந்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் 66வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாகவும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் 67வது படத்தை ’மாஸ்டர்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை ’மாஸ்டர்’ படத்தை தயாரித்த லலித்குமார் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே ’மாஸ்டர்’ கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதால் மீண்டும் ஒரு சூப்பர்ஹிட் படம் விஜய்க்கு உறுதி என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos