முன்னாள் முதல்வர் பேரனை திருமணம் செய்யும் தனுஷ் பட நடிகை!

  • IndiaGlitz, [Sunday,February 14 2021]

தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த நடிகை, முன்னாள் முதல்வர் ஒருவரின் பேரனை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

’நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற படத்தில் தமிழில் அறிமுகமாகிய நடிகை மெஹ்ரீன் ப்ரீஸ்தா அதன் பின்னர் விஜய்தேவரகொண்டாவின் ‘நோட்டோ’, தனுஷின் ’பட்டாஸ்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை மெஹ்ரீனுக்கும் முன்னாள் ஹரியானா முதல்வர் பஜன்லால் அவர்களின் பேரன் பாவ்யா பிஷ்னாய் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை அடுத்து விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பாவ்யா பிஷ்னாய் அவர்களும் ஒரு அரசியல்வாதி என்பதும் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாவ்யா பிஷ்னாய் மற்றும் மெஹ்ரீன் ஆகிய இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

'குக் வித் கோமாளி' பிரபலத்தின் மனைவி புகைப்படம்: இவருக்கு திருமணம் ஆகிவிட்டதா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்'களும், கோமாளிகளும் பார்வையாளர்கள்

காஜல் அகர்வாலின் அடுத்த ஓடிடி படம் குறித்த தகவல்!

காஜல் அகர்வால் நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய ஓடிடி திரைப்படமான 'லைவ் டெலிகாஸ்ட்' ஹாட்ஸ்டாரில் நேற்று வெளியானது என்பதும் த்ரில் கதையம்சம் கொண்ட

தனுஷின் 'கர்ணன்' ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய 'கர்ணன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டப்பிங் பணிகளை தனுஷ் முடித்து

ரஜினியிடம் பாராட்டு பெற்ற நடிகருக்கு அடிக்க போகிறதா ஜாக்பாட்?

முதல் படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் பாராட்டு பெற்ற நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை அவர் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால்

மார்ச் 1 க்கு அப்புறம் பாருங்க… சசிகலா குறித்து பகீர் ஏற்படுத்தும் அரசியல்  வீடியோ!

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து கடந்த 27 ஆம் தேதி விடுதலை ஆனார் திருமதி சசிகலா.