close
Choose your channels

காஜல் அகர்வாலின் அடுத்த ஓடிடி படம் குறித்த தகவல்!

Saturday, February 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காஜல் அகர்வால் நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய ஓடிடி திரைப்படமான ’லைவ் டெலிகாஸ்ட்’ ஹாட்ஸ்டாரில் நேற்று வெளியானது என்பதும் த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வால் நடிக்க உள்ள அடுத்த ஓடிடி படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது

காஜல் அகர்வால் நடிக்கும் அடுத்த ஓடிடி திரைப்படம் தெலுங்கில் உருவாக இருப்பதாகவும் இந்த ஓடிடி படத்தை தெலுங்கு இயக்குனர் மாருதி இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஓடிடி திரைப்படத்திற்கு ’3 ரோசஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை ஸ்ரீனிவாச குமார் என்பவர் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

ஏற்கனவே காஜல் அகர்வால் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.