மெர்சல் அப்டேட்: இன்று மதியம் 2 மணிக்கு இன்ப அதிர்ச்சி

  • IndiaGlitz, [Friday,August 18 2017]

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் படக்குழுவினர் புரமோஷன் பணிகளை செவ்வனே செய்து வருகின்றனர்.

விஜய் பட வரலாற்றில் முதல்முறையாக சிங்கிளாக இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி பட்டையை கிளப்பி வரும் நிலையில் நாளை மறுநாள் பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு மிகபெரிய, ஆச்சரியத்தை வரவழைக்கும் செய்தி ஒன்று வெளியாகவுள்ளதாக ஸ்ரீதேனாண்டாள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'மெர்சல்' படத்தின் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பா? அல்லது 3வது பாடல் வெளியாகிறதா? என்று விஜய் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். எதுவாக இருந்தாலும் இன்று 2 மணிக்கு விஜய் ரசிகர்களால் இணையதளங்கள் அதிர போகின்றன என்பது மட்டும் உண்மை.

More News

ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

'36வயதினிலே' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன ஜோதிகா, அந்த படத்தின் வெற்றியை அடுத்து நடித்துள்ள படம் 'மகளிர் மட்டும்...

அஜித்துடன் நேருக்கு நேர் மோதும் வழக்கறிஞர்

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் வியாழன் அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது...

மெர்சல் ஆடியோ விழாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் தளபதி

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் 'மெர்சல்' படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களை மிரட்டிய நிலையில் நாளை மறுநாள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த படத்தின் ஆடியோ விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது...

மீண்டும் பிக்பாஸில் ரீஎண்ட்ரி? புதிய ஹேர்ஸ்டைலின் ரகசியம்: ஓவியா பதில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மன உளைச்சல் காரணமாக வெளியேறிய ஓவியா சற்றுமுன்னர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்...

காமெடி நடிகர் அல்வா வாசு காலமானார்.

பிரபல காமெடி நடிகர் அல்வா வாசு கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி நேற்று காலமானார்....