close
Choose your channels

மெர்சல் அப்டேட்: இன்று மதியம் 2 மணிக்கு இன்ப அதிர்ச்சி

Friday, August 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் படக்குழுவினர் புரமோஷன் பணிகளை செவ்வனே செய்து வருகின்றனர்.

விஜய் பட வரலாற்றில் முதல்முறையாக சிங்கிளாக இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி பட்டையை கிளப்பி வரும் நிலையில் நாளை மறுநாள் பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு மிகபெரிய, ஆச்சரியத்தை வரவழைக்கும் செய்தி ஒன்று வெளியாகவுள்ளதாக ஸ்ரீதேனாண்டாள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'மெர்சல்' படத்தின் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பா? அல்லது 3வது பாடல் வெளியாகிறதா? என்று விஜய் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். எதுவாக இருந்தாலும் இன்று 2 மணிக்கு விஜய் ரசிகர்களால் இணையதளங்கள் அதிர போகின்றன என்பது மட்டும் உண்மை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.