close
Choose your channels

உயிருடன் மனித நரபலி… மண்டை ஓடுகளால் நிரம்பிய பழங்கால கோபுரம் கண்டுபிடிப்பு!!!

Saturday, December 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உயிருடன் மனித நரபலி… மண்டை ஓடுகளால் நிரம்பிய பழங்கால கோபுரம் கண்டுபிடிப்பு!!!

 

மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள் நிரம்பிய கோவில் கோபுரம் ஒன்றை மானுடவியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இந்தக் கோபுரத்தில் உள்ள அனைத்து மண்டை ஓடுகளும் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஆய்வாளர்கள் எழுப்பி உள்ளனர். காரணம் ஒரே இடத்தில் இத்தனை மண்டை ஓடுகள் நிரம்பி இருப்பதோடு ஆய்வு செய்து பார்த்ததில் அவைகள் வெட்டப்பட்டு இருப்பதற்காக அடையாளத்தையும் கண்டுபிடித்து உள்ளனர்.

மெக்சிகோவின் தலைநகர் மெக்சிகோ சிட்டி பகுதியில் உள்ள ஹுட்சிகோ போச்ட்லி தேவாலயத்தின் கோபுரம் முழுவதும் வெறுமனே மண்டை ஓடுகளால் நிரம்பி இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வரலாற்று ஆய்வாளர்கள் அப்போதே சில மண்டை ஓட்டை அக்கோவிலின் ஒரு பகுதியான ஹுவேசெம்பாண்ட்லி எனும் இடத்தில் கண்டுபிடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அப்பகுதியில் மீண்டும் ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்கள் ஒரே இடத்தில் 119 மண்டை ஓடுகளை கண்டுபிடித்து உள்ளனர்.

முதலில் போர் வீரர்கள் இந்த இடத்தில் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் எனக் கருதிய ஆய்வாளர்கள் அதைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் மண்டை ஓட்டையும் கண்டுபிடித்ததால் கடும் அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர். இந்த மண்டை ஓடுகள் அனைத்தும் கி.பி. 1486-1562 ஆம் ஆண்டுகளில் ஆட்சி புரிந்த ஆஸ்டெக் பேரரசின் காலத்தைச் சேர்ந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 1521 ஆம் ஆண்டு ஸ்பானியர்கள் இந்த இடத்தை பிடிக்கும் வரையிலும் ஆஸ்டெக் எனும் பழங்குடி மக்கள் அங்கு வாழ்ந்து வந்துள்ளனர். ‘

இந்த இனக்குழுவில் ஒருவேளை நரபலிக் கொடுக்கும் பழக்கம் இருந்திருக்கலாம் அல்லது ஆஸ்டெக் பேரரசின் வளர்ச்சிக்காக இப்படி தேவாலயத்தில் வைத்து போர் வீரர்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது. பகுதி அளவில் மட்டும் 119 மண்டை ஓடுகள் கிடைத்துள்ள நிலையில் இந்த பேராலயத்தின் இன்னும் சுவாரசியங்கள் நிறைந்து இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.