மணிரத்னம் உள்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு: மத்திய அமைச்சர் விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,October 09 2019]

சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து பிரதமருக்கு இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் கடிதம் எழுதிய நிலையில் இந்த கடிதம் எழுதிய 49 பேர் மீது சமீபத்தில் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய பீகார் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் இதுகுறித்து திரையுலகினர்களும், அரசியல்வாதிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட இயக்குனர் பாரதிராஜா மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இந்த வழக்கை வாபஸ் பெறும்படி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டதற்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் நீதிமன்ற உத்தரவின்பேரில்தான் அவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளதாகவும், சில சிறிய கூட்டங்கள் வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பி வருவதாகவும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

More News

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்!

நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் உருவான 'மான்ஸ்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வெற்றியைப் பெற்றது என்பது தெரிந்ததே

சென்னையில் 'பிகில்' கோப்பை கால்பந்து போட்டி!

பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக கொண்டு தயாராகியுள்ள விஜய்யின் 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது 

அனைத்து ஸ்க்ரீன்களிலும் 'பிகில்' தான்: சென்னை திரையரங்கின் நிர்வாக இயக்குனர் டுவீட்!

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும்,

ஆங்கில அறிவு: பிரபல நடிகையை கிண்டல் செய்த ஹர்பஜன்சிங்

சமீபத்தில் ஐநா மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் பேசியதற்கு இந்தியாவின் அரசியல் தலைவர்களும்,

'நிலம் எங்கள் உரிமை': அசுரன் குழுவினர்களுக்கு பா.ரஞ்சித் வாழ்த்து

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.