பால்கனி அரசு என விமர்சனம் செய்த கமலுக்கு அமைச்சர் பதிலடி

கடந்த சில மாதங்களாகவே உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் மத்திய, மாநில அரசுகளை சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறார். அவரது விமர்சனங்கள் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கமலுக்கு அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கமல்ஹாசன் தனது டுவிட்டரில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பாதிக்கும் எதையும் செய்ய கூடாது என்கிறார் பிரதமர்.ஆனால் மத்திய,மாநிலஅரசுகள் தனது ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தையும் ஈட்டிய விடுப்பையும் முடக்குகின்றன. தொழில்முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்கவேண்டும் பால்கனி அரசுகள்’ என்று விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த பால்கனி அரசுகள் என்ற விமர்சனத்திற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி கூறியபோது, ‘கமல்ஹாசன் பால்கனியில் இருந்து மக்களை பார்க்கிறார். நாங்கள் மக்களுடன் இருந்து பால்கனியை பார்க்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

More News

அமெரிக்காவில் கொரோனா தாக்கம்!!! பல இந்திய மாணவர்களின் கனவை வீணாக்கியிருக்கிறது!!!

கொரோனா வைரஸ் பரவல் அமெரிக்காவை புரட்டிப் போட்டிருக்கிறது. பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியிருக்கும் நிலையில் உயிரிழப்பும் 60 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

கொரோனாவால் வியட்நாமில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை!!! எதிர்கொண்ட விதம்???

கொரோனா பலி எண்ணிக்கைக் குறித்து உலக நாடுகள் கவலைத் தெரிவித்து வருகின்றன. பரவல் வேகமும் அதிகரித்து வருகிறது.

சென்னையில் நாளை எத்தனை மணி வரை கடைகள் திறந்திருக்கும்? தமிழக அரசு தகவல்

கொரோனா பாதிப்புக் காரணமாக மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 29 வரையிலும்,

அர்த்தராத்திரியில் குடை பிடித்தால் ஆரோக்யம்: பிரபல நடிகையின் டுவீட்

சமீபத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மக்கள் அனைவரும் குடை பிடிக்க வேண்டும் என சமீபத்தில் கேட்டுக்கொண்டார்.

டுவிட்டரில் இருந்து திடீரென விலகிய நடிகர் விவேக்: என்ன காரணம்?

சமூக வலைத்தளமான டுவிட்டரில் இருந்து மே 3ஆம் தேதி வரை விலகுவதாக நடிகர் விவேக் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.