இர்ஃபான்கான் மறைவிற்கு மோடி, சச்சின், கமல் இரங்கல்!

கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கபப்ட்ட பாலிவுட் நடிகர் இர்ஃபான்கான் நேற்று திடீரென மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சையின் பலனின்றி அவர் இன்று காலமானார்.

இர்ஃபான்கான் மறைவிற்கு பாலிவுட் திரையுலகமே தங்களது சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இர்பான்கான் மறைவு குறித்து பிரதமர் மோடி கூறியதாவது: இர்பான்கான் இழப்பு உலக சினிமாவுக்கு பேரிழப்பு என்றும், அவரது தனித்துவ நடிப்பால் என்றும் நினைவுகூறப்படுவார் என்றும் கூறினார்.

இர்பான்கான் மறைவு குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறியபோது, இர்ஃபான் கானின் மறைவைக் கேட்டது வருத்தமாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். கிட்டத்தட்ட அவர் நடித்த அத்தனை படங்களையும் பார்த்திருக்கிறேன். கடைசியாக ’அங்ரேஸி மீடியம்’ பார்த்தேன். பெரிய சிரமமின்றி அவருக்கு நடிப்பு வந்தது. அட்டகாசமான நடிகர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவருக்கு நெருக்கமானவர்களுக்கு என் அனுதாபங்கள் என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில், ‘மிக விரைவில் சென்றுவிட்டீர்கள் இர்ஃபான் ஜி. உங்கள் பணி எப்போதும் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த நடிகர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் அதிக காலம் வாழ தகுதியானவர். இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்திற்கு அதிக பலமும், சக்தியும் கிடைக்கட்டும்’ என கூறியுள்ளார்.

More News

சென்னையில் மிக அதிக பாதிப்பு: இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் இன்று மட்டும் மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை

மத்திய அரசின் அதிரடி உத்தரவால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிம்மதி

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரங்கில் பெரும் பிரச்சனையாக இருப்பது வெளி மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தமாக புலம்பெயர்ந்து இருக்கும் தொழிலாளர்கள் தான்.

'மங்காத்தா' படக்காட்சியை கொரோனா விழிப்புணர்வுக்காக பயன்படுத்திய தேனி காவல்துறை!

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மிக வேகமாக தமிழகத்தில் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது அரசு மற்றும் காவல்துறையினர் சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர் 

கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்திற்கு சிக்கலா? பிரபல நடிகரின் தகவலால் பரபரப்பு

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகை விஜயநிர்மலா வாழ்க்கை வரலாற்றில் நடிக்க

700 கிமீ நடந்து வந்த விழுப்புரம் இளைஞரை கைது செய்த போலீஸ்!

ஹைதராபாத்திலிருந்து சொந்த ஊரான விழுப்புரத்திற்கு சுமார் 700 கிலோமீட்டர் நடந்து வந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது