close
Choose your channels

இர்ஃபான்கான் மறைவிற்கு மோடி, சச்சின், கமல் இரங்கல்!

Wednesday, April 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கபப்ட்ட பாலிவுட் நடிகர் இர்ஃபான்கான் நேற்று திடீரென மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சையின் பலனின்றி அவர் இன்று காலமானார்.

இர்ஃபான்கான் மறைவிற்கு பாலிவுட் திரையுலகமே தங்களது சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இர்பான்கான் மறைவு குறித்து பிரதமர் மோடி கூறியதாவது: இர்பான்கான் இழப்பு உலக சினிமாவுக்கு பேரிழப்பு என்றும், அவரது தனித்துவ நடிப்பால் என்றும் நினைவுகூறப்படுவார் என்றும் கூறினார்.

இர்பான்கான் மறைவு குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறியபோது, "இர்ஃபான் கானின் மறைவைக் கேட்டது வருத்தமாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். கிட்டத்தட்ட அவர் நடித்த அத்தனை படங்களையும் பார்த்திருக்கிறேன். கடைசியாக ’அங்ரேஸி மீடியம்’ பார்த்தேன். பெரிய சிரமமின்றி அவருக்கு நடிப்பு வந்தது. அட்டகாசமான நடிகர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவருக்கு நெருக்கமானவர்களுக்கு என் அனுதாபங்கள்" என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில், ‘மிக விரைவில் சென்றுவிட்டீர்கள் இர்ஃபான் ஜி. உங்கள் பணி எப்போதும் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த நடிகர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் அதிக காலம் வாழ தகுதியானவர். இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்திற்கு அதிக பலமும், சக்தியும் கிடைக்கட்டும்’ என கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.