close
Choose your channels

மோகன் ராஜா- நயன்தாரா படத்தின் புதிய சூப்பர் அப்டேட்!

Thursday, February 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான ’தனி ஒருவன்’ மற்றும் ’வேலைக்காரன்’ ஆகிய திரைப்படங்களில் நாயகியாக நடித்த நயன்தாரா தற்போது அவர் இயக்கும் அடுத்த படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் வந்துள்ளது.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ’லூசிபர்’ என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் மோகன்லால் கேரக்டரில் சிரஞ்சீவி நடித்து வருகிறார்

இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இன்றுடன் இந்த படத்தில் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மோகன் ராஜாவுடன் நயன்தாரா எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார் என்பதும், நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment