close
Choose your channels

சூர்யாவுக்கு நன்றி சொன்ன மோகன்பாபு!

Monday, June 17, 2019 • தமிழ் Comments

சூர்யா நடித்து வரும் 'சூரரை போற்று திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சூர்யா, மோகன்பாபு ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சூர்யா தனது சமூக வலைத்தளத்தில், 'மோகன்பாபு அவர்களுடன் இணைந்து செட்டில் பணிபுரிவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. ஒரு மிகப்பெரிய, கண்ணியமான நடிகருடன் இணைந்து நடிக்கின்றேன். 500 படங்களுக்கும் மேல் நடித்த ஒரு மாபெரும் நடிகருடன் இணைந்து நடிப்பதால் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளும் அற்புதமன வாய்ப்பை பெற்றுள்ளேன். எங்கள் 'சூரரை போற்று' படத்தில் இணைந்த அவருக்கு எனது நன்றிகள்' என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த மோகன்பாபு, 'உங்களுடைய கனிவான வார்த்தைகளுக்கு நன்றி சூர்யா. உங்களுடைய ஒழுக்கம் மற்றும் எளிமை உங்களுடைய அருமையான குணத்தை வெளிப்படுத்துகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பில் உங்களை மீண்டும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன், என் இளமையான நண்பரே!' என்று கூறியுள்ளார்.
 

Get Breaking News Alerts From IndiaGlitz