close
Choose your channels

மணிஹெய்ஸ்ட் Prequel ரிலீஸ் குறித்த அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி!

Wednesday, February 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பிரபலமான மணிஹெய்ஸ்ட் தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு என்பதும் இந்த தொடர் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சீசன் தொடங்கியதிலிருந்து 2021 ஆம் ஆண்டு மூன்றாவது சீசன் முடிவடையும் வரை இந்த தொடரை உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் பார்த்தார்கள் என்பதும் குறிப்பாக இந்தியாவில் இந்த தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மணிஹெய்ஸ்ட் முந்தைய பாகம் என்று கூறப்படும் Prequel ரிலீஸ் குறித்த அறிவிப்பை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. மணிஹெய்ஸ்ட் தொடரின் முக்கிய கேரக்டர்களில் ஒன்றான பெர்லினை வைத்து Prequel தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பெர்லின் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த தொடர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ரொபசர் உடன் கொள்ளை கும்பலில் சேர்வதற்கு முன்னர் பெர்லின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது குறித்து இந்த தொடரில் விளக்கப்படும் என்றும் மொத்தம் 8 எபிசோடுகளாக இந்த தொடர் படமாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.