சென்னை 600028' 2ஆம் பாகத்தில் நிஜ கிரிக்கெட் வீரர்கள்

  • IndiaGlitz, [Monday,April 25 2016]
சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. முதல் பாகத்தில் நடித்த ஜெய், சிவா, விஜயலட்சுமி, பிரேம்ஜி உள்பட பலர் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் தென்காசி படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பியுள்ளனர். இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டை அம்சமாக கொண்ட இந்த படத்தில் நிஜ கிரிக்கெட் வீரர்களை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க வெங்கட்பிரபு முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முரளிவிஜய் ஆகியோர்களை இந்த படத்தின் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும், தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருவரும் பிசியாக இருப்பதால், இந்த போட்டிகள் முடிவடந்தவுடன் 'சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர்கள் நடிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கிரிக்கெட் குறித்த ஒரு பாடலும் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை வெங்கட்பிரபு தயாரித்து இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

2வது முறையாக ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்...

விஷால் ரசிகர்களுக்கு மீண்டும் ஏற்பட்ட ஏமாற்றம்

விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் உள்பட பலர் நடிப்பில் சுந்தர் சி இயக்கிய 'மதகஜராஜா' திரைப்படம் பலவிதமான பிரச்சனைகளுக்கு...

மகாத்மா காந்தி குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்து

மகாத்மா காந்தியின் கேரக்டரை உள்ளடக்கிய 'ஹே ராம்' படத்தை இயக்கி நடித்தவர் கமல்ஹாசன் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கோவையில்...

இதுவரை 'தெறி'யின் சென்னை வசூல் நிலவரம்

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'தெறி' திரைப்படம் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் சாதனை வசூலை பெற்று வருகிறது என்று அவ்வப்போது வெளிவந்த செய்திகளை பார்த்தோம்....

சமுத்திரக்கனியின் 'அப்பா' குறித்து சூர்யா என்ன கூறப்போகிறார்?

சூர்யாவின் அப்பா சிவகுமாரின் ஓவியம் வரைதல் குறித்து நேற்று சூர்யா பெருமையாக கூறியதை பார்த்தோம்...