'துப்பறிவாளன் 2' படத்தில் திடீர் டுவிஸ்ட்: அசத்தும் மிஷ்கின்

  • IndiaGlitz, [Sunday,November 24 2019]

விஷால் நடித்த ’ஆக்சன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் ’துப்பறிவாளன் 2’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் மிஷ்கின் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தி மிஷ்கின் மற்றும் விஷால் ரசிகர்களுக்கு ஒரு டுவிஸ்ட்டாக கருதப்படுகிறது.

இந்த செய்தியை உறுதி செய்வதைப்போல் சமூக வலைதளங்களில் மிஷ்கின் மேக்கப் போட்டு கேமரா முன் நடிப்பதற்கு தயாராக இருப்பது போன்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

விஷால், பிரசன்னா மீண்டும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை விஷால் பிலிம்ஸ் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டில் வெளிவந்த ’துப்பறிவாளன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் ’துப்பறிவாளன் 2’ படமும் முதல் பாகத்தைப் போலவே ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஆசிரியர் டார்ச்சர் எதிரொலி: 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

நம் முன்னோர்கள் அம்மா அப்பாவிற்கு அடுத்த இடத்தில் குருவை வைத்து, குரு என்பவர் ஒரு உன்னதமான உறவு என்பது போல் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் தற்போது ஆசிரியர்கள்

விஜய் செய்யப் போகும் அதிசயம்-அற்புதம்: ரசிகர்களின் போஸ்ட்டரால் பரபரப்பு 

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அளித்த பேட்டியின் போது '2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிசயம் அற்புதம் நடக்கும் என்றும், அந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில்

'90Ml' பட நடிகைக்கு கிடைத்த முக்கிய பதவி

ஓவியா நடித்த '90Ml' திரைப்படம் ஒருசில சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் அந்த படம் ஒரு தரப்பினர்களை மிகவும் கவர்ந்தது. இந்த படத்தில் ஓவியாவுடன் நான்கு முக்கிய கேரக்டர்களில் நான்கு

தமன்னாவின் மன அழுத்தத்தை குறைப்பது எது தெரியுமா?

தென்னிந்திய திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட் திரை உலகிலும் கால் வைத்து கடந்த பல வருடங்களாக முன்னணி இடத்தில் இருந்து வருபவர் நடிகை தமன்னா.

ரஜினி, கமல் அரசியல் குறித்து ஓவியாவின் பரபரப்பு பதில்

தமிழ் சினிமாவில் சற்குணம் இயக்கிய 'களவாணி' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, ஒரு சில வெற்றி படங்களை கொடுத்த நடிகை ஓவியா முன்னணி நடிகைகளின் பட்டியலை நோக்கி முன்னேறிக்