close
Choose your channels

'90Ml' பட நடிகைக்கு கிடைத்த முக்கிய பதவி

Saturday, November 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஓவியா நடித்த ’90Ml' திரைப்படம் ஒருசில சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் அந்த படம் ஒரு தரப்பினர்களை மிகவும் கவர்ந்தது. இந்த படத்தில் ஓவியாவுடன் நான்கு முக்கிய கேரக்டர்களில் நான்கு நடிகைகள் நடித்திருந்தனர். அவர்களில் ஒருவர் காஜல் என்ற கேரக்டரில் நடித்த நடிகை மசூம் ஷங்கர். இவரும் இன்னொரு பிரபல நடிகையும் தற்போது சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையின் ‘ஸ்மைல் ட்ரையின்’அமைப்புக்கு தூதுவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

‘ஸ்மைல் ட்ரையின்’ என்பது உதடு பிளவு மற்றும் அண்ணம் பிளவு உள்ள குழந்தைகளின் குறையை தீர்க்கும் ஒரு அமைப்பாகும். இதுகுறித்து குழந்தைகளிடமும் பெற்றோர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த தனியார் மருத்துவமனை இரண்டு நடிகைகளை தூதுவர்களாக நியமனம் செய்துள்ளது.

அந்த தூதுவர்களில் ஒருவர் ’90Ml' பட நடிகை மசூம் ஷங்கர் என்பதும் இன்னொருவர் பிரபல நடிகை ப்ரியா ஆனந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பதவியை பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.