நடிகர் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,October 24 2015]

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி அமோக வெற்றி பெற்ற நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் முதல் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் நடைபெறும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முதல் கூட்டத்தில் 'பொதுக்குழுவை எப்போது கூட்டுவது, பொதுக்குழு கூட்டத்திற்கு யார் யாரை அழைப்பது என்பது குறித்த ஆலோசனை செய்யப்படவுள்ளதாக கூறாப்படுகிறது. மேலும் முதல் பொதுக்குழு கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளும் நடைபெறும் என தெரிகிறது.

மேலும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர்களுக்கு கெளரவ பதவி வழங்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் 'நடிகர் சங்கத்தில் தனக்கு எந்த கெளரவ பதவியும் வேண்டாம் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் பெயரையும் மாற்ற வேண்டாம் என்றும் பாண்டவர் அணிக்கு கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

அஜீத்திடம் என்னதான் இருக்குது? ஆர்ஜே பாலாஜி ஆச்சர்யம்

விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் கடந்த 21ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில்...

'மாரி 2', 'விஐபி 2' எப்போது? தனுஷ்

தனுஷ், காஜல் அகர்வால், ரோபோசங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பாலாஜி மோகனின் 'மாரி' திரைப்படம் தனுஷ் ரசிகர்களின் பேராதரவை வெற்றி....

ஒரிஜினலை பார்த்து ஒரிஜினலாக இருங்கள். நயன்தாரா வேண்டுகோள்

நயன்தாரா நடித்த 'தனி ஒருவன்', 'மாயா' படங்களை அடுத்து நேற்று முன் தினம் ரிலீஸான 'நானும் ரெளடிதான்' திரைப்படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதால்....

நயன்தாராவின் அர்ப்பணிப்பு குறித்து ஆச்சரியப்படும் படக்குழுவினர்

விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி பெருவாரியான...

அதிகாலை 4.00 மணிக்கு வேதாளத்தை முடித்த அஜீத்

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து....