close
Choose your channels

நடிகர் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு

Saturday, October 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி அமோக வெற்றி பெற்ற நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் முதல் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் நடைபெறும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முதல் கூட்டத்தில் 'பொதுக்குழுவை எப்போது கூட்டுவது, பொதுக்குழு கூட்டத்திற்கு யார் யாரை அழைப்பது என்பது குறித்த ஆலோசனை செய்யப்படவுள்ளதாக கூறாப்படுகிறது. மேலும் முதல் பொதுக்குழு கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளும் நடைபெறும் என தெரிகிறது.

மேலும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர்களுக்கு கெளரவ பதவி வழங்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் 'நடிகர் சங்கத்தில் தனக்கு எந்த கெளரவ பதவியும் வேண்டாம் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் பெயரையும் மாற்ற வேண்டாம் என்றும் பாண்டவர் அணிக்கு கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.