close
Choose your channels

'மாரி 2', 'விஐபி 2' எப்போது? தனுஷ்

Saturday, October 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ், காஜல் அகர்வால், ரோபோசங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பாலாஜி மோகனின் 'மாரி' திரைப்படம் தனுஷ் ரசிகர்களின் பேராதரவை வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் தனுஷ் கூறியுள்ளார்.

தனுஷ் தயாரித்த 'நானும் ரெளடிதான்' வெற்றி பெற்றதை அடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தின் மூலம் ரசிகர்களுக்கு நன்றி கூறினார். அப்போது அவர் மேலும் கூறியதாவது, 'மாரி' படத்தின் 2ஆம் பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறினார். மேலும் 'வேலையில்லா பட்டதாரி' இரண்டாம் பாகம் பண்ண ஆசை என்றும் ஆனால் எப்போது என்பதை தன்னால் இப்போது சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.

தற்போது கோலிவுட்டில் பாகுபலி 2, டார்லிங் 2, கோ 2, சிங்கம் 3, காஞ்சனா 3 என்று இரண்டாம் பாக, மூன்றாம் பாக சீசன் ஆரம்பித்துள்ள நிலையில், அந்த வரிசையில் மாரி 2, விஐபி 2 படங்களும் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.