close
Choose your channels

நீயும் உன் பொண்ணும் உயிரோட இருக்கணும்ன்னா, ஓடிப்போயிடுங்க: நாகார்ஜூனனின் 'இரட்சன்' டிரைலர்

Monday, October 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா நடித்த ’தி கோஸ்ட்’ என்ற தெலுங்கு படம் தமிழில் என்ற ’இரட்சன்’ பெயரில் வெளியாக உள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

சுமார் இரண்டு நிமிடங்கள் உள்ள இந்த டிரைலரில் நாகார்ஜுனாவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் மாஸ் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. நாகார்ஜூனா, சோனல் சவுகான், அனிகா சுரேந்திரன்,ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ப்ரவீன் சத்தாரு இயக்கியுள்ளார்.

ஓய்வு பெற்ற ரா ஏஜண்ட் விக்ரம் என்ற கேரக்டரில் நடித்துள்ள நாகார்ஜூனாவுக்கு அவரது தங்கையிடம் இருந்து ஒருநாள் போன் வருகிறது. அதில் தனது மகள் ஆபத்தில் இருப்பதாகவும், அவரை காப்பாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றார். தங்கை மகளை காப்பாற்ற களமிறங்கும் விக்ரமுக்கு என்ன சவால்கள் காத்திருந்தன என்பது தான் இந்த படத்தின் கதை. விக்ரமின் தங்கை மகளாக அனிகா சுரேந்திரன் நடித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment