திருமணத்திற்கு பின்னர் நமீதா நடிப்பாரா? கணவர் வீரா பதில்

  • IndiaGlitz, [Friday,November 24 2017]

நடிகை நமீதா-வீரா திருமணம் இன்று காலை திருப்பதில் சிறப்பாக நடைபெற்றது. இருவீட்டார் உறவினர்கள், நண்பர்கள், மற்றும் திரையுலகினர் புதுமண தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் நமீதா தனது கணவருடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: எனது கணவர் வீரேந்திர சவுத்ரி என்னுடைய நல்ல நண்பர். என்னை நன்றாக புரிந்து கொண்டவர். நானும் அவரை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறேன்.
இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு மணமக்கள் ஆகி இருக்கிறோம். திருப்பதியில் எங்கள் திருமணம் இந்து முறைப்படி நடந்து இருக்கிறது. எங்கள் வாழ்க்கை நல்லபடி அமையும் என்று நம்புகிறேன்

நமீதாவின் கணவர்  வீரேந்திர சவுத்ரி கூறியதாவது: நமீதா என்னிடம் நீண்ட நாட்களாக நட்புடன் பழகினார். நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தோம். நமீதா சிறந்த நடிகை. அவர் தொடர்ந்து நடிக்க எந்த தடையும் இல்லை. அவருக்கு பிடித்தமான நல்ல வேடங்கள் அமைந்தால் எந்த மொழி படங்களிலும் நடிப்பார். எப்போதும் அவர் சுதந்திரமாக இருப்பார்.

எனவே திருமணத்திற்கு பின்னரும் நல்ல வேடங்கள் கிடைத்தால் நமீதா திரைப்படங்களில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தேர்தல் நேரத்தில் கலக்க வரும் விஷ்ணு மஞ்சுவின் 'குறள் 388'

பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிக்கும் 'குறள் 388' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் அவருடைய பிறந்த நாளில் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது

கார்த்திக் சுப்புராஜூடன் 2வது முறையாக இணையும் தனுஷ்?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், இந்த பெரிய பட்ஜெட் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

கரு.பழனியப்பனின் அடுத்த படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகை

இயக்குனர் கரு.பழனியப்பன் இயக்கும் அடுத்த படமான 'புகழேந்தி என்னும் நான்' என்ற அரசியல் த்ரில்லர் படத்தின் நாயகனாக அருள்நிதி நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

நேற்று ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக பெயர், கொடி சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் இன்று ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

'வேலைக்காரன்' இசை வெளியீட்டு தேதி குறித்த தகவல்

பிரபல இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த வேலைக்காரன் திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.