close
Choose your channels

தனுஷின் அடுத்த படத்தை இயக்கும் தேசிய விருது பெற்ற இயக்குனர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Friday, June 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் தற்போது ஹாலிவுட் படமொன்றில் நடித்து வருகிறார் என்பதும் இதனை அடுத்து அவர் கார்த்திக் நரேன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி செல்வராகவன் இயக்கும் படத்திலும் வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் அவர் அடுத்தடுத்து நடிக்க உள்ளார் என்பது தெரிந்ததே

இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல இயக்குனரான தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற தனுஷூம் தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா ஆகிய இருவரும் ஒரே படத்தில் இணைய இருப்பது இந்திய திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை நாராயணதாஸ் நரங் என்பவர் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.