close
Choose your channels

பெண்கள் குறித்து சக்திவாய்ந்த பாடல் பாடிய பிரபலத்தின் 12 வயது மகள் நவ்யா உமேஷ்..!

Monday, March 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சர்வதேச ஒலிம்பியாட் உள்பட பல நிகழ்ச்சிகளில் பாடிய கலை இயக்குனர் உமேஷ் மகள் நவ்யா உமேஷ் என்பவர் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர் பாடிய பெண்களை பற்றிய சக்தி வாய்ந்த மற்றும் ஆழமான பாடல் மகளிர் கொண்டாட்டமாக வெளியாகி உள்ளது.

ஒரு பெண்ணை அடையாளப்படுத்தும் ஒவ்வொரு சுதந்திர உணர்வின் கொண்டாட்டமாக அமைந்துள்ள இந்த பாடல் முழு உற்சாகத்துடன் அனுபவிக்கும் வகையில் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இளம் வயதில் ஆன்மாவை ஊடுருவும் அளவுக்கு தாக்கமான குரல் மற்றும் சிறந்த காட்சி அமைப்பு இந்த பாடலுக்கு வலு சேர்க்கிறது. தளபதி விஜய் உடன் ஜோஷ் ஆலுக்காஸ் விளம்பரம், கமல்ஹாசன் உடன் பிக் பாஸ் ப்ரோமோ, சூப்பர் சிங்கர் சரிகம ப்ரோமோ உள்ளிட்ட பல விளம்பரங்களிலும் இவர் தனது பங்களிப்பை கொடுத்துள்ளார்.

மேலும் ’அதே கண்கள்’ படத்தை இயக்கிய ரோஹித் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகிய இந்த பாடலுக்கு நவநீத் சுந்தர் இசையமைத்துள்ளார். ’என்ஜாய் என்ஜாமி’ உள்பட சில வீடியோக்களுக்கு நடனம் அமைத்த ’தி டான்சர்ஸ் கிளப்’ இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளனர். மகளிர் தின விருந்தாக வெளியாகிய இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.