close
Choose your channels

சின்னத்திரையில் நடுவராகும் நயன்தாரா

Saturday, April 20, 2019 • தமிழ் Comments

முன்பெல்லாம் சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகர், நடிகைகள் மட்டுமே சின்னத்திரைக்கு வருவதுண்டு. ஆனால் தற்போது முன்னணி நடிகர், நடிகைகளான கமல்ஹாசன், விஷால், விஜய்சேதுபதி, வரலட்சுமி உள்பட பலர் சின்னத்திரையில் தோன்றி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் திரைப்படங்களை விட சின்னத்திரையில் நடிக்கும் கலைஞர்களுக்கு பணமும் புகழும் அதிகம் கிடைத்து வருகிறது

இந்த நிலையில் ரஜினி, விஜய், சிரஞ்சீவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் சின்னத்திரையில் தோன்றவுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் நயன்தாரா தோன்றவிருப்பதாக விளம்பரங்கள் வெளியாகியுள்ளது. நயன்தாரா எந்த நிகழ்ச்சியில் தோன்றவுள்ளார் என அந்த தொலைக்காட்சி அறிவிக்கவில்லை என்றாலும் ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக அல்லது கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் போன்றதொரு நிகழ்ச்சியில், நயன்தாரா தோன்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சின்னத்திரையில் தோன்றும் நடுவர்கள் பெரும்பாலும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஆஹா, ஓஹோ என புகழ்வது வழக்கம். நயன்தாரா அதேபோன்ற ஒரு நடுவராக இருப்பாரா? அல்லது வித்தியாசமாக ஏதாவது செய்வாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்

Get Breaking News Alerts From IndiaGlitz