close
Choose your channels

நயன்தாராவின் குஜராத்தி திரைப்படம் விஜய்சேதுபதி படத்தின் ரீமேக்கா?

Sunday, February 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது தனது காதலருடன் இணைந்து தொடங்கிய ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பல தமிழ் படங்களை தயாரித்து வரும் நிலையில் முதல் முறையாக ஒரு குஜராத்தி திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தை தேசிய விருது பெற்ற மணிஷ் சைனி என்பவர் இயக்க உள்ளதாகவும் மல்ஹர் தக்கார் மற்றும் மோனல் கஜார் நடிப்பில் இந்த படம் உருவாக இருப்பதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு ‘சுப் யாத்ரா’ என்ற டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது.,

இந்த நிலையில் இந்த படம் தமிழில் வெளியான விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் படத்தின் குஜராத்தி மொழி ரீமேக் என்று தற்போது தெரிய வந்துள்ளது. தமிழில் விஜய் சேதுபதி, ரித்திகாசிங் நடிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவான ’ஆண்டவன் கட்டளை’ என்ற திரைப்படம் குஜராத் மொழியில் ரீமேக் செய்யப் படுவதாகவும் இந்த படத்தைதான் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.