நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,May 19 2019]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு 'விஸ்வாசம்', ஐரா மற்றும் 'மிஸ்டர் லோக்கல்' ஆகிய திரைப்படங்கள் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படமான 'கொலையுதிர்க்காலம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து சமீபத்தில் சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் பெற்ற நிலையில் இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தின் இந்தி பதிப்பான 'காஷ்மோ' திரைப்படம் இம்மாதம் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 'கொலையுதிர்க்காலம்' படமும் அதே தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு வாரங்கள் கழித்தே 'கொலையுதிர்க்காலம்' வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா, பிரதாப் போத்தன், பூமிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். வி.மதியழகன் தயாரிப்பில் கோரே ஜெர்யாக் ஒளிப்பதிவில் ராமேஷ்வர் பகத் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

'காஞ்சனா' இந்தி ரீமேக்கில் இருந்து வெளியேறிய ராகவா லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்சயகுமார், கைரா அத்வானி, மாதவன் நடிப்பில் உருவாகி வரும் 'காஞ்சனா' திரைப்படத்தின் இந்தி ரீமேக் படமான 'லட்சுமி பாம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த

அர்னால்ட் முதுகில் காலால் உதைத்த மர்ம நபர்! வைரலாகும் வீடியோ

பிரபல ஹாலிவுட் நடிகரான அர்னால்ட் பிரிடேட்டர், டெர்மினேட்டர் உள்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கலிபோர்னியா மாகாணத்தின் மேயராகவும் இருந்த

விஜய்யை அடுத்து சூர்யா படம்: இளம் இயக்குனருக்கு குவியும் வாய்ப்புகள்!

'மாநகரம்' படத்தின் மூலம் கோலிவுட்டின் பார்வையை தனது பக்கம் திருப்பிய இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தி நடித்து வரும் 'கைதி' திரைப்படத்தினை இயக்கி முடித்துள்ளார்.

'அவெஞ்சர்ஸ்' படத்தை பார்க்காமலேயே மறைந்த ஸ்டேன் லீ

மார்வெல் படங்களின் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கியவர் ஸ்டென் லீ என்பது அனைவரும் அறிந்ததே. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தன்னுடைய 95வது வயதில் காலமானார்.

'அயோக்யா' படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஏ.ஆர்.முருகதாசின் 2 குடும்பங்கள்

இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷிகண்ணா நடித்த 'அயோக்யா' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.