close
Choose your channels

விஜய்யை அடுத்து சூர்யா படம்: இளம் இயக்குனருக்கு குவியும் வாய்ப்புகள்!

Sunday, May 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'மாநகரம்' படத்தின் மூலம் கோலிவுட்டின் பார்வையை தனது பக்கம் திருப்பிய இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தி நடித்து வரும் 'கைதி' திரைப்படத்தினை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் லோகேஷ், அடுத்ததாக விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 64' படத்தினை இயக்கவுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவுக்கு ஒரு ஃபேண்டசி கதையை லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பதாகவும், உலகம் முழுவதும் புகழ் பெற்ற காமிக கேரக்டரான 'ஸ்டீல் க்ளா' (Steel Claw) கேரக்டர் போன்ற கதையம்சம் உள்ள இந்த கதையில் இம்ப்ரஸ் ஆன சூர்யா, இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அனேகமாக 'தளபதி 64' படத்தினை முடித்துவிட்டு சூர்யா படத்தை அவர் இயக்கலாம் என தெரிகிறது.

சூர்யாவின் 'என்.ஜி.கே' மற்றும் 'காப்பான்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் மே 31 மற்றும் ஆகஸ்ட் 30 ஆகிய தினங்களில் வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூரரை போற்று' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து ஸ்டுடியோக்ரீன் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் ஹரி இயக்கத்திலும் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.