ரஜினியின் 'தர்பார்': நயன்தாரா குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட லைகா!

  • IndiaGlitz, [Tuesday,April 23 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடந்ததால் ஓட்டு போட சென்னை திரும்பிய ரஜினிகாந்த், பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று முதல் ரஜினி-நயன்தாரா காட்சிகள் படமாக்கப்படுவதால் 'தர்பார்' படப்பிடிப்பில் இன்று நயன்தாரா கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக அவர் நேற்றே மும்பை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா இன்றைய படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடொக்சன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது.

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரத்யேக் பாபர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'தர்பார்' படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தளபதி 63: விஜய் அக்காவாக நடிக்கும் பிரபல நடிகை!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்

ஓவியாவின் அடுத்த படத்திற்கு நீதிமன்றம் தடை

விமல், ஓவியா நடித்த களவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை தி.நகரில் திடீரென பற்றி எரிந்த கார்கள்

சென்னை தி.நகரில் பிசியாக உள்ள ஜி.என்.செட்டி சாலையில், சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

'சூர்யா 39' படம் குறித்த அட்டகாசமான அறிவிப்பு!

சூர்யா நடிக்கவுள்ள 39வது படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என பிரபல தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோக்ரீன் இன்று காலை அறிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சென்னை இளைஞர்களை குறிவைக்கும் போதை ஸ்டாப்! கைது செய்யப்பட்டவர் வெளியிட்ட பகீர் தகவல்!

சென்னையில் உள்ள பணக்கார இளைஞர்களை குறிவைத்து போதை ஸ்டாம்ப், மற்றும் பல்வேறு வடிவிலான