close
Choose your channels

தளபதி 63: விஜய் அக்காவாக நடிக்கும் பிரபல நடிகை!

Tuesday, April 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருவது தெரிந்ததே. தற்போது இந்த படத்தில் விஜய்க்கு அக்காவாக நடித்து வரும் நடிகை குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அவர்தான் பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகை தேவதர்ஷினி

முதலில் 'தளபதி 63' படத்தில் நடிக்க விஜய் தங்கையாக நடிக்க தன்னுடைய மகளை இயக்குனர் அட்லி அழைத்ததாகவும், ஆனால் அவருக்கு 10ஆம் வகுப்பு தேர்வு இருந்ததால் அவரால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்றும், அதன்பின்னர் அந்த கேரக்டரை அக்காவாக மாற்றி அந்த கேரக்டரில் தன்னை இயக்குனர் அட்லி நடிக்க வைத்ததாகவும் தேவதர்ஷினி தெரிவித்தார்.

 

'தளபதி 63' படத்தில் இதுவரை ஐந்து நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும், விஜய் தன்னை முதலில் பார்த்தபோது 'அக்கா' என்று அழைத்தது பெருமையாக இருந்ததாகவும் குறிப்பிட்ட தேவதர்ஷினி, விஜய்யுடன் தான் நடித்த காட்சிகள் குடும்பத்தில் நடக்கும் நகைச்சுவையான காட்சிகள் என்றும், அவருடைய வழக்கமான குடும்ப காமெடி இந்த படத்திலும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் விஜய்யின் மாஸ் என்றுமே குறையாமல் இருப்பது குறித்து கூறிய தேவதர்ஷினி, 'இதெல்லாம் கடவுள் அவருக்கு கொடுத்த வரமாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறினார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.