close
Choose your channels

சென்னை வந்த ஷாருக்கானுக்கு நயன்தாரா கொடுத்த முத்தம்.. வைரல் வீடியோ

Monday, February 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை வந்த ஷாருக்கானுக்கு நயன்தாரா முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜவான்’ திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு ஷாருக்கான் சென்னை வந்திருந்த நிலையில் தற்போது நயன்தாராவின் குழந்தைகளை பார்ப்பதற்காக ஷாருக்கான் சென்னை வந்துள்ளார்.

சிறிது நேரம் நயன்தாராவின் வீட்டிலிருந்த அவர் அதன் பின் விடை பெற்று செல்லும்போது கார் வரை அவரை நயன்தாரா சென்று வழி அனுப்பி வைத்தார். அதன் பின்னர் ஷாருக்கான் காரில் ஏறும்போது அவருக்கு முத்தம் கொடுத்து வழி அனுப்பினார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ’ஜவான்’ திரைப்படம் ஜூன் மாதம் 2ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.