close
Choose your channels

முடிவுக்கு வந்தது நயன்தாராவின் அடுத்த படம்

Saturday, December 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித்துடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் அவர் நடித்த அடுத்த படமான 'கொலையுதிர்க்காலம்' திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி ஜனவரி இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நயன்தாரா நடித்து வந்த இன்னொரு படமான 'ஐரா' திரைப்படத்தின் படப்பிடிப்பும் இன்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சர்ஜூன் இயக்கத்தில் கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 'விஜய் 63', 'சயிரா நரசிம்மரெட்டி, அருண்குமார் இயக்கும் படம் மற்றும் லவ் ஆக்சன் டிராமா என்ற மலையாள படம் ஆகிய படங்களில் நயன்தாரா நடித்து வருவதால் 2019ஆம் ஆண்டில் நயன்தாராவின் ஆறு படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment