லைகாவின் அடுத்த படத்தில் நயன்தாரா - அனிருத்

  • IndiaGlitz, [Saturday,August 26 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'அறம்', 'இமைக்கா நொடிகள்', 'வேலைக்காரன்', 'கொலையுதிர்க்காலம்' ஆகிய படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது சூப்ப ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவின் அடுத்த படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.

'கோலமாவு கோகிலா' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். இவர் சிம்புவின் 'வேட்டை மன்னன்' என்ற படத்தை இயக்கி பாதியில் கைவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் இசைப்புயல் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

More News

ஜேஎஸ்கே நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'தரமணி', தேசிய விருது பெற்ற 'குற்றம் கடிதல்' உள்பட பல திரைப்படங்களை தயாரித்துள்ள ஜேஎஸ்கே நிறுவனம் தனது அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் இதர விவரங்களை அறிவித்துள்ளது...

விஷாலின் 'துப்பறிவாளன்' சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி

கோலிவுட் திரையுலகில் ஒரு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னர் டிரைலர் மட்டுமே வெளியாகி இருந்த நிலையில் தற்போது பர்ஸ்ட்லுக், மோஷன் போஸ்டர், டீசர், டிரைலர், உள்பட பல புரமோஷன்கள் நடைபெற்று வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஒன் ஹார்ட்': சென்சார் & ரன்னிங் டைம் தகவல்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்து இயக்கியிருக்கும் கான்சர்ட் திரைப்படம் 'ஒன் ஹார்ட். தமிழில் வெளிவரும் முதல் கான்சர்ட் திரைப்படம் இதுதான். இதற்கு முன்னர் ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனை வைத்து உருவாக்கப்பட்ட ‘திஸ் இஸ் இட்’ (This is it) என்ற கான்சர்ட் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிபெற்றது...

ஓவியாவை கெளரவப்படுத்த இணையும் அனிருத்-யுவன் கூட்டணி

பிக்பாஸ் ஓவியாவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ள நிலையில் அவர் அந்த நிகழ்ச்சியில் பேசிய ஒவ்வொரு வசனமும் டிரெண்ட் ஆகி வருகிறது...

பரோலில் வெளியே வந்துள்ள பேரறிவாளனுக்கு திருமணமா?

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், நேற்று இரவு பரோலில் விடுதலையானார்.