close
Choose your channels

நயன்தாராவின் புதிய திரைப்படத்தின் பூஜை.. இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படம் வைரல்..!

Tuesday, May 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஏற்கனவே மாதவனுடன் ’தி டெஸ்ட்’ மற்றும் யோகி பாபு உடன் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் புதிய திரைப்படம் குறித்த பூஜை புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி உடன் நடிகை நயன்தாரா நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு நடந்த ஏப்ரல் மாதம் வெளியானது என்பதும் இந்த படத்துக்கு ’டியர் ஸ்டூடண்ட்’ டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில் இது குறித்த புகைப்படத்தை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளதை அடுத்து அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரல் ஆகி வருகின்றனர்.

ஏற்கனவே நிவின் பாலி உடன் ’லவ் ஆக்சன் ராமா ’என்ற படத்தில் நடிகை நயன்தாரா நடித்த நிலையில் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கும் படம் தான் ‘டியர் ஸ்டூடண்ட்’ என்பதும் இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியை கேரக்டரில் நயன்தாரா நடிப்பதாக கூறப்படும் இந்த படத்தை ஜார்ஜ் பிலிப்ஸ் ராய் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இயக்கி வருகின்றனர். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.