close
Choose your channels

'ராயன்' சோலோ ரிலீஸ் இல்லையா? அதே தேதியில் வெளியாகும் பிரபலத்தின் திரைப்படம்..!

Tuesday, May 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’ராயன்’ என்ற திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று நேற்று சன் பிக்சர்ஸ் அறிவித்த நிலையில் அந்த படம் அநேகமாக ஜூன் 13ஆம் தேதி வெளியாகலாம் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஏற்கனவே ஜூன் 13ஆம் தேதி கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அந்த படம் ஜூலைக்கு தள்ளி வைத்து விட்டதால் ’ராயன்’ திரைப்படம் சோலோவாக ரிலீஸ் ஆகும் என்றும் அதனால் ஓப்பனிங் வசூல் அபாரமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ’ராயன்’ ரிலீஸ் என கூறப்படும் அதே ஜூன் 13ஆம் தேதி விக்ரம் நடித்த ’தங்கலான்’ திரைப்படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் ஜூன் 13ஆம் தேதி ’தங்கலான்’ படத்தை வெளியிட அந்த படத்தின் குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ஜூன் 13ஆம் தேதி 'ராயன்’ மற்றும் ’தங்கலான்’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இரண்டு படங்களும் வெளியானாலும் இரண்டு படங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

தேர்தலுக்காக பல படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது ஒவ்வொரு மாஸ் நடிகர்களின் படங்கள் ரிலீசாகி கொண்டு இருப்பதால் இனி வரும் நாட்களில் குறிப்பாக கோடை விடுமுறையில் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.