close
Choose your channels

பிரபல ஹீரோவுடன் மீண்டும் இணைந்த நயன்தாரா.. டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டர் வீடியோ..!

Sunday, April 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல நடிகருடன் இணைந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த நிலையில் தற்போது மீண்டும் அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அது குறித்த வீடியோவும் வெளியாகியுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தில் இருக்கும் நிலையில் தற்போது கூட அவர் பிஸியாக சில படங்களில் நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நயன்தாரா நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் தான் நயன்தாரா நடிக்க உள்ளார். ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு ’லவ் ஆக்சன் டிராமா’ என்ற திரைப்படத்தில் நிவின் பாலி உடன் இணைந்து நயன்தாரா நடித்திருந்த நிலையில் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இந்த நிலையில் மீண்டும் நிவின் பாலியுடன் நயன்தாரா நடிக்கும் படத்திற்கு ’டியர் ஸ்டூடண்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு மோஷன் போஸ்டர் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் நயன்தாரா இந்த படத்தில் டீச்சர் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை ஜார்ஜ் பிலிப்ஸ் ராய் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இயக்கி வருகின்றனர். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.