close
Choose your channels

மேக்கப்புக்கு முன்..  மேக்கப்புக்கு   பின்.. நயன்தாரா வெளியிட்ட வீடியோ வைரல்..!

Sunday, February 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மேக்கப்புக்கு முன் மற்றும் மேக்கப்புக்கு பின் என வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக நடித்து வருபவர் நயன்தாரா என்பதும் நடிகையாக மட்டுமின்றி அவர் சில படங்களை தயாரித்து வருகிறார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் நயன்தாரா அழகு சாதன நிறுவனம் ஒன்றை தொடங்கினார் என்பதும் அந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அவரே ப்ரமோஷன் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய அழகு சாதன நிறுவனத்தின் தயாரிப்புகளை அவரே மேக்கப் போட்டு காண்பிக்கும் வீடியோவை பதிவு செய்துள்ளார். மேக்கப் போடாமல் நயன்தாரா இருக்கும் நிலையில் தொடங்கும் இந்த வீடியோ அதன் பின் அவரே மேக்கப் போட்டபின் எப்படி இருக்கிறார் என்பதை என் காண்பிக்கும் காட்சிகள் வரை உள்ளன. தன்னுடைய நிறுவன தயாரிப்பின் விளம்பரத்துக்காக அவரே மேக்கப் போட்டு நடித்த இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தற்போது மாதவனுடன் ’தி டெஸ்ட்’ என்ற படத்திலும், ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment