திருமணத்திற்கு பின்னர் மீண்டும் நடிக்க வரும் 'நய்யாண்டி' நடிகை

  • IndiaGlitz, [Thursday,August 20 2015]

'நேரம்' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை நஸ்ரியா அதன் பின்னர் அட்லியின் முதல் படமான 'ராஜா ராணி', தனுஷ் நடித்த 'நய்யாண்டி', 'திருமணம் என்னும் நிக்காஹ்' போன்ற படங்களில் நடித்தார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்து கொண்டு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தபோது திடீரென பிரபல நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்.

திருமணத்திற்கு பின்னர் நஸ்ரியா மீண்டும் நடிக்க மாட்டார் என அவரது வட்டாரங்கள் கூறிவந்த நிலையில் தற்போது அவர் மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நஸ்ரியா நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவரது கணவர் பகத்பாசில்தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. கேரளா கஃபே, உஸ்தாத் ஹோட்டல், பெங்களூரு டேய்ஸ், பிரேமம் போன்ற பல படங்களை தயாரித்த பிரபல மலையாள தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான அன்வர் ரஷீத் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

நிஜ வாழ்க்கையில் ஒன்றிணைந்த பகத்பாசில்-நஸ்ரியா ஜோடி திரையுலும் ஜோடியாக நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நஸ்ரியாவின் ரீ எண்ட்ரி அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

More News

'புலி' டிரைலர் விமர்சனம்

கோடிக்கணக்கான விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வண்ணம் இன்று அதிகாலை மிகச்சரியாக 12 மணிக்கு இளையதளபதியின் "புலி' பட டிரைலர் இணையதளங்களிலும், ஒரு முன்னணி தொலைக்காட்சியிலும் ரிலீஸாகியது......

மீண்டும் கொல்கத்தாவில் அஜீத்-ஸ்ருதிஹாசன்

'என்னை அறிந்தால்' படத்தை அடுத்து அஜீத் நடித்து வரும் 'தல 56" படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொல்கத்தாவில் முடிவடைந்து தற்போது அடுத்தகட்டமாக...

'புலி' டிரைலர் குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' படத்தின் டிரைலர் இன்று நள்ளிரவு சரியாக 12மணிக்கு வெளியாகவுள்ளது...

கமல், விஜய், அஜீத் நாங்க எல்லோரும் ஒரே குடும்பம். சிம்பு

சிம்பு நடித்த வாலு' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...

விஜய் தவறவிட்ட வாய்ப்பை கைப்பற்றிய கமல்?

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் "தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக...