நீட் தேர்வு தோல்வி எதிரொலி: மேலும் ஒரு மாணவர் மரணம்

  • IndiaGlitz, [Tuesday,June 05 2018]

நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபமான சம்பவம் தமிழகம் முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த ஒரு மாணவர் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து 8வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டார்

டெல்லியை சேர்ந்த பிரணவ் மகேந்திரதா என்ற மாணவர் நீட் தேர்வை எழுதியிருந்த நிலையில் நேற்று வெளியான நீட் தேர்வு முடிவை ஆர்வத்துடன் இணையதளம் மூல்ம் பார்த்தார். ஆனால் அவர் தேர்ச்சி பெறவில்லை. இந்த அதிர்ச்சியை தாங்கி கொள்ள முடியாத பிரணவ் திடீரென தனது அபார்ட்மெண்டின் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த பிரணவ் இந்த ஆண்டு எப்படியும் தேர்ச்சி பெற்றுவிட கடுமையாக உழைத்துள்ளார். ஆனால் இந்த ஆண்டும் வெற்றி பெற முடியாத விரக்தியில் பிரணவ் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

மகனுக்கு வாழ்த்து கூறிய ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மகன் அமீன், 'எந்திரன்' படத்தில் இடம்பெற்ற 'புதிய மனிதா' உள்ளிட்ட ஒருசில பாடல்கள் பாடியுள்ளார். தந்தையை போலவே இசைத்துறையில் ஆர்வம் உள்ள அமீன், படிப்பிலும் சிறந்தவர்

நீட் தேர்வு தோல்வி எதிரொலி: விழுப்புரம் மாணவி தற்கொலை

கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழக மாணவிக்கு தேசிய அளவில் 12வது இடம்

மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று பிற்பகல் இந்த தேர்வின் முடிவுகள் வெளியானது.

மும்பை வருமான வரி அலுவலகத்தில் தீவிபத்து: நீரவ் மோடி, விஜய் மல்லையா குறித்த முக்கிய ஃபைல்கள் சாம்பலா?

மும்பை நகரில் உள்ள பல்லார்டு பியர் என்ற பகுதியில் உள்ள சிந்தியா ஹவுஸ் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் வருமான வரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது

பிரபல இயக்குனருடன் நிச்சயதார்த்தம்: ஸ்வேதா பாசு அறிவிப்பு

தமிழில் 'ராரா', சந்தமாமா' ஆகிய படங்களிலும் ஒருசில தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை ஸ்வேதா பாசு. இவர் கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் இயக்குனர் ரோஹித் மிட்டலை காதலித்து வந்ததாக கூறப்பட்டது.