close
Choose your channels

அடுத்த வாரம் டைரக்ட் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்.. ஜோவிகா கூறிய காரணம்..!

Thursday, October 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று வைக்கப்பட்ட டாஸ்க்கில் பிக் ஹவுஸ் போட்டியாளர்கள், ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்களை வீழ்த்தினர். இதனை அடுத்து பிக் ஹவுஸ் போட்டியாளர்களுக்கு தனது வாழ்த்துக்களை என பிக்பாஸ் தெரிவித்தார்.

இதனை அடுத்து தோல்வி அடைந்த அணியில் உள்ள யாராவது ஒருவரை பிக் ஹவுஸ் வீட்டில் உள்ளவர்கள் தேர்வு செய்து அவரை நேரடியாக அடுத்த வாரம் நாமினேஷனுக்கு அனுப்பலாம் என்று பிக் பாஸ் கூறினார்.

இதனை அடுத்து ஜோவிகா எழுந்து வந்து விஷ்ணுவை நாமினேட் செய்வதாக கூறினார். இந்த வாரம் விஷ்ணு நாமினேஷனில் இருந்து தப்பித்து இருந்தார் என்றும் அதனால் அவருடைய நடவடிக்கைகள் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது என்றும் ஒருவேளை அவர் நாமினேஷனில் இருந்திருந்தால் அதை தவிர்த்து இருப்பார் என்றும் அதனால் தான் அவரை அடுத்த வாரத்திற்கு நேரடியாக நாமினேஷன் செய்கிறோம் என்றும் காரணம் கூறினார்.

இந்த காரணத்தை விஷ்ணு அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் எதிர்வினை என்ன ஆகும் என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.