உயிருடன் புதைக்கப்பட்ட அரியவகை மான்: அதிர்ச்சி வீடியோ

  • IndiaGlitz, [Friday,September 06 2019]

பீகார் மாநிலத்தில் நீலான் என்ற அரிய வகை மான், கூட்டம் கூட்டமாக வந்து விவசாயிகள் கஷ்டப்பட்டு பயிர் செய்த பயிர்களை நாசமாக்குவதாக வனத்துறையினர்களுக்கு புகார் வந்தது. இதனையடுத்து நீலான் வகை மான் இனங்களை சுட்டுக்கொல்ல வனத்துறை ஆட்களை நியமனம் செய்ததாக கூறப்படுகிறது

கடந்த சில வாரங்களில் சுமார் 300 நீலான் வகை மான்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் குண்டடிபட்ட ஒரு மானை ஜேசிபி இயந்திரம் மூலம் உயிருடன் புதைக்கப்படும் வீடியோ ஒன்று சமூக இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலர், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்

இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த காவல்துறையினர், ‘உயிருடன் விலங்கினங்களை புதைப்பது மனிதத்தன்மையற்ற செயல். இது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. இந்த வீடியோ குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கையின்படி ஜேசிபி டிரைவர் கைது செய்யப்பட்டதாகவும், ஒரு வனத்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

More News

அபராதம் கேட்டதால் ஆத்திரம்: சொந்த பைக்கையே கொளுத்திய போதை ஆசாமி!

செப்டம்பர் 1-ம் தேதி முதல் இந்தியாவின் பல மாநிலங்களில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

கட்சி ஆரம்பித்தால் டிடிவி நிலைதான் ரஜினிக்கு ஏற்படும்: தமிழக அமைச்சர்

தமிழக அரசியல் களத்தில் கடந்த சில மாதங்களாகவே ரஜினி குறித்த செய்தி வெளிவராத நாளே இருக்காது என்று கூறலாம். ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும்,

மீண்டும் வனிதா-ஷெரின் மோதல்! என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

பிக்பாஸ் வீட்டில் சண்டை தவிர வேறு எதுவுமே நடக்காதா? என்று பார்வையாளர்கள் நினைக்கும் அளவுக்கு அந்த நிகழ்ச்சியின் புரமோவிலும் சரி, ஒரு மணி நேர நிகழ்ச்சியிலும் சரி சண்டை தவிர வேறு

வரலட்சுமியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி. அந்த வகையில் நடிகர் விமலுடன் வரலட்சுமி நடித்த திரைப்படம் 'கன்னிராசி.

இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் சுசீந்திரனின் அடுத்த பட டீசர்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதிராஜா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஸ்போர்ஸ் திரைப்படமான 'கென்னடி கிளப்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்