close
Choose your channels

இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் சுசீந்திரனின் அடுத்த பட டீசர்

Friday, September 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதிராஜா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஸ்போர்ஸ் திரைப்படமான ‘கென்னடி கிளப்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் இயக்கியுள்ள அடுத்த ஸ்போர்ட்ஸ் திரைப்படமும் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. அந்த படம் தான் ‘சாம்பியன்’.

கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என்றும் இந்த படத்தின் டீசரை நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்வா, மிருனாளினி, நரேன், ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார். சுஜித் சரங் ஒளிப்பதிவில், தியாகு படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே அக்டோபரில் தான் விஜய் நடித்த கால்பந்து ஸ்போர்ட்ஸ் திரைப்படமான ‘பிகில்’ வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.