close
Choose your channels

வரலட்சுமியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Friday, September 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி. அந்த வகையில் நடிகர் விமலுடன் வரலட்சுமி நடித்த திரைப்படம் ‘கன்னிராசி. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் செப்டம்பர் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இன்று வெளியாகவிருந்த தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ஒருசில பிரச்சனைகளால் ரிலீஸ் ஆகாத நிலையில் செப்டம்பர் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று செய்திகள் வந்துள்ள நிலையில் அதே நாளில் ‘கன்னிராசி’ திரைப்படமும் வெளியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

விமல், வரலட்சுமி சரத்குமார், பாண்டியராஜன், யோகி பாபு, ரோபோ சங்கர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை முத்துகுமரன் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையில், செல்வகுமார் ஒளிப்பதிவில் ராஜாமுகமது படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.