கையில் கட்டப்பை! காத்திராத உறவினர்கள்: ஜாமீனில் வெளிவந்த நிர்மலாதேவி

  • IndiaGlitz, [Wednesday,March 20 2019]

அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றின் மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பின்னர் 11 மாதங்கள் கழித்து இன்று ஜாமீனில் வெளியே வந்தார்.

நிர்மலாதேவியை ஜாமீனில் வெளியே எடுக்க அவரது உறவினர்களே முன்வராத நிலையில் வழக்கறிஞரின் உதவியால் ஜாமீனில் வெளிவந்த நிர்மலாதேவியை அழைத்து செல்ல கூட உறவினர்கள் யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

சிறை வாசலில் காத்திருந்த வழக்கறிஞர் மட்டும் செய்தியாளர்களிடம், 'இது ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்றும், நிர்மலாதேவி மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்பதை நிரூபித்து விரைவில் அவர் விடுதலை ஆவார் என்றும், தற்போது பல எதிர்ப்புகளுக்குப் பின் நீதிமன்ற உத்தரவின்படி ஜாமீனில் வெளியே வந்துள்ளதாகவும்' தெரிவித்தார்.

கையில் மூன்று கட்டப்பைகளுடன் உறவினர் துணையின்றி தனியாக அவர் தன் வீட்டிற்கு நடந்து செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

திமுக பெண் வேட்பாளரை முகம் சிவக்க வைத்த உதயநிதி!

திமுக பெண் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரச்சாரம் செய்த நடிகர் உதயநிதி பேச்சால், தமிழச்சி தங்கபாண்டியன் வெட்கத்தால் முகம் சிவந்த

பிரசவத்தின்போது தலை துண்டான குழந்தை! சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்

சென்னை அருகே உள்ள கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு பெண்ணின் பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டானதால் மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

நட்சத்திர வேட்பாளர் தொகுதி: மதுரையில் வெல்வது யார்?

தென் தமிழகத்தில் மதுரை பாராளுமன்ற தொகுதி மிகவும் முக்கியமான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியில் தான் பி.கக்கன்  கே.டி.கே தங்கமணி, பி.ராமமூர்த்தி,

இளம் இயக்குனர், பிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் அருண்விஜய்

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன நடிகர் அருண்விஜய்க்கு, 'தடம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது

10 லிட்டர் பிராந்தி, ரூ.10 லட்சம் பணம்: ஒரு வேட்பாளரின் வாக்குறுதி

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குறுதி அளிப்பது என்பது காலங்காலமாக நடந்து வரும் நடைமுறை. வெற்றி பெற்ற பின் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு,